அட்வெஞ்சர் பைலட் இயக்கம், நிஜ கமாண்டோ சண்டைப் பயிற்சி – மிரட்ட வரும் படம்
நடிகர் ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.துருவங்கள் 16 அதற்கு ஒரு சாட்சி. அவர் தற்போது வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்து வரும் திரைப்படம், “ஆபரேஷன் அரபைமா”.கதையின் நாயகியாக “நாடோடிகள்”அபிநயா நடித்திருக்கிறார்.
இவர்களோடு டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி.வில்சன், அனூப் சந்திரன், பாலாஜி, ரமேஷ், டேனி, மோகிதா பட்டக், மணிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார்.
தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர் ப்ராஷ். இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில்,
நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன்.
இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாகக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரகுமான்.
தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது, “ஆபரேஷன் அரபைமா”.
இப்படத்துக்கு இசை ராகேஷ் பிரம்மானந்தம், ஒளிப்பதிவு ஃபீனிக்ஸ் உதயன், படத்தொகுப்பு: விஜயகுமார், ஷைஜூ,
பாடல்கள் : முருகன் மந்திரம்
வசனம் : ப்ராஷ், அரவிந்த் கலாதர், முருகன் மந்திரம்,
சண்டைப் பயிற்சி : கேப்டன் அனில்குமார் (Rtd NSG Commando Trainer), & கமாண்டோ அஜித்குமார், (Thunderbolt Commando Chief, Kerala Police).
நிஜ கமாண்டோ பயிற்சியாளர்களே இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருப்பதால் அவை நிச்சயம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெரும் என்பதில் மாற்றமில்லை.











