செய்திக் குறிப்புகள்

பேட்ட பட வெளிநாட்டுரிமை – கைப்பற்றியது பிரபல நிறுவனம்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’.

இப்படத்தின் தமிழக உரிமையை உதயநிநியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது.

இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது.

மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது.

எங்கள் மலேசிய மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் வரும் 2019 ஜனவரி பொங்கல் திருநாளில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தை வெளியிடும் உரிமையைப் (இந்தியா தவிர்த்து) பெற்றுள்ளது என்று அந்நிறுவன உரிமையாளர் ’டத்தோ’மாலிக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Related Posts