சினிமா செய்திகள் நடிகை

மீடூ சிக்கல் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா

ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று பெண்கள் கருதுவது முட்டாள்தனமான பாசாங்கு என்று நான் கருதுகிறேன். பெண்கள் ஆண்களை விட மேலானவர்கள். ஆண்கள் எதைக் கொடுத்தாலும் அதைப் பன்மடங்கு பெரிதாக்கி திருப்பிக் கொடுப்பவர்கள் பெண்கள்

இவ்வாறு தொடங்கி சில உதாரணங்களோடு கடைசியில் நீங்கள் அவர்களைத் துன்புறுத்தினால் அதைவிடப் பன்மடங்கு துன்பத்தைப் பெறத் தயாராக இருங்கள்

என்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியர், கவிஞர் சர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங் (Sir Willam Gerald Golding) சொன்னதை எடுத்து ட்வீட் செய்திருக்கிறார் ஓவியா.

சர் வில்லியம் கோல்டிங், 1954 ஆம் ஆண்டு லார்டு ஆஃப் தி ப்ளைஸ் (Lord of the Flies) என்ற நாவலை எழுதினார். நன்மை, தீமை இரண்டுக்கும் இடையேயான மனிதனின் உள்முகப் போராட்டங்கள் குறித்த இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமடைந்து, மாபெரும் வெற்றி பெற்றது. பெயரும் புகழும் அவரைத் தேடிவந்தது. இந்நாவல் 1963-ல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.

அதன்பின்னர், பிஞ்சர் மார்ட்டின், ஃப்ரீ ஃபால், தி ஸ்பயர், 3 குறுநாவல்களின் தொகுப்பான தி ஸ்கார்பியன் காட், டார்க்னஸ் விசிபிள், டு தி என்ட்ஸ் ஆஃப் எர்த் என பல வெற்றிகரமான படைப்புகள் வெளிவந்தன.

‘ரைட்ஸ் ஆஃப் பேஸேஜ்’ நாவலுக்காக 1980-ல் புக்கர் பரிசு பெற்றார். பல விருதுகள், கவுரவங்களைப் பெற்ற இவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 73 வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
1988-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது.

இவ்வளவு புகழ் பெற்றவரின் கருத்தை, மீடூ சிக்கல் பெரிதாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஓவியா வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் பெண்களௌக்குத் துன்பம் தருகிற ஆண்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Related Posts