செல்வராகவன் கோரிக்கை சூர்யா அதிர்ச்சி
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே’.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு படுதீவிரமாக நடைபெற்றது.
படப்பிடிப்புக்கு இடையே, செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால். ‘என்.ஜி.கே’ படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது.
இதனால், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா கவனம் செலுத்தத் தொடங்கினார்.
மீண்டும் ‘என்.ஜி.கே’ படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. இது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா 37 படத்தின் லுக்கிலிருந்து சூர்யா மீண்டு வர ’என்.ஜி.கே’ குழு காத்திருக்கிறது. நவம்பரில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பின்னர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் பகிரப்படும். உங்கள் அனைவருக்கும் ஒரு பெரும் விருந்து படைக்க காத்திருக்கிறேன்
என்று அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை நூறுநாட்களுக்கு மேல் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்க இன்னும் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் கூறினாராம்.
இதனால் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.











