படக்குழுவின் அச்சத்தைப் போக்கிய உதயநிதி
இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 15’ நேரடியாக சமகால அரசியலை, சாதிய ஒடுக்குமுறையை, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசுகிறது. இதுபோன்ற துணிச்சலான முயற்சிகள் தமிழில் வரவேண்டும் என்று பலர் கருத்துத் தெரிவித்தார்கள். அதைச் செயலாக்கினார் உதயநிதி.
ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழாக்கத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அருண்ராஜா காமராஜ் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகும் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இதற்கான அறிவிப்பு 2020 ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்பின் அப்படம் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை. மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் நடிக்கப்போனார் உதயநிதி. அதன்பின் தேர்தல் பரப்புரை தேர்தலில் போட்டி என்று போய்விட்டார். இதனால் மகிழ்திருமேனி படமே தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
இதனால் ஆர்ட்டிகல் 15 மொழிமாற்று நடப்பது சந்தேகம்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.
அவற்றைப் பொய்யாக்கி, அப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவிருக்கிறது.
மகிழ்திருமேனி படத்தின் படப்பிடிப்பு பாக்கியிருக்கும்போதும் அதை முதலில் முடிக்காமல் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் உதயநிதி.
தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராகிவிட்டால் இந்தப்படத்தில் நடிக்காமல் போய்விடுவாரோ என்கிற படக்குழுவினரின் அச்சத்தைப் போக்கவே இந்தப் படப்பிடிப்பைத் தொடங்க்விருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.












