விமர்சனம்

நட்புன்னா என்னான்னு தெரியுமா? – விமர்சனம்

கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

மூவரில் ஒருவருக்கு நாயகி ரம்யா நம்பீசன் மீது காதல். ஆனால் நாயகிக்கோ வேறொருவர் மீது காதல்.

இது போதாதா? ஒரு படத்துக்கு .

நண்பர்களுக்குள் பிரிவு வருகிறது.
ராஜுவும் அருண்ராஜாவும் ஒன்றாகிறார்கள். கவின் தனியாக நிற்கிறார்.

பிரிந்த நண்பர்கள் இணைந்தார்களா, கவின், ரம்யா காதல் என்ன ஆனது என்பதுதான் திரைக்கதை.

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்துள்ள கவின், இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். யதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

இரண்டாவது நாயகனாக நடித்திருப்பவர் புதுமுகம் ராஜு. புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி முதல் படத்திலேயே மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். இவருக்கு நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய அதிக வாய்ப்பு உள்ள வேடம் சரியாகச் செய்திருக்கிறார் .

மூன்றாவது நாயகன் அருண்ராஜா காமராஜ் . பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். அவருடைய அப்பாவித்தனமான முகம் அதற்குப் பெரிதும் உதவுகிறது.

கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார்.நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது.

இளவரசு ,மொட்ட ராஜேந்திரன், மன்சூரலிகான், அழகம்புருமாள் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

தரண் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை பொருத்தம்.

யுவராஜின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக்கியிருக்கிறது.

இயக்குநர் சிவா அரவிந்த் நட்பை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்.

இரண்டாவது பாதி கலகலப்பாகப் போகிறது. அதனால் வருகிறார்கள் சந்தோசமாகப் போகலாம்.

Related Posts