செய்திக் குறிப்புகள்

நாடோடிகள் 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

2009 ஆம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது.

சமுத்திரக்கனி எழுதி இயக்கும் இப்படத்தில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – ஏகாம்பரம்
கலை – ஜாக்கி,எடிட்டிங் – ரமேஷ்,பாடலாசிரியர் – யுகபாரதி,சண்டைப்பயிற்சி – திலீப் சுப்புராயன்,
நடனம் – திணேஷ், ஜான்.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

Related Posts