செய்திக் குறிப்புகள்

கங்குவா டீசருக்கு வரவேற்பு – படக்குழு உற்சாகம்

நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கங்குவா.இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

மிலன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, நிஷாத் யூசுப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார்.சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். விவேகா மற்றும் மதன் கார்க்கி பாடல் வரிகளில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

சவுண்ட் அண்ட் விஷன் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த லாரன்ஸ் விஷ்ணு ரெக்கார்டிங் இன்ஜினியர். அனு வர்தன் மற்றும் தட்ஷா பிள்ளை ஆகியோர் ராஜனுடன் இணைந்து ஆடை வடிவமைப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். செரினாவும் குப்புசாமியும் ஒப்பனையைக் கவனித்திருக்க, ரஞ்சித் அம்பாடி சிறப்பு ஒப்பனையைக் கையாண்டுள்ளார். ஷோபி மற்றும் பிரேம் ரக்ஷித் ஆகியோர் படத்திற்கு நடன இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸின் வம்சி-பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது.

வெளியானது முதல்,மேக்கிங் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அமோகமான பாராட்டுகளை டீசர் பெற்றுவ்ருகிறது.இந்தப் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைந்துள்ள விஎஃப்எக்ஸ் குழு படத்தில் இன்னும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

நடிகர் சூர்யாவின் ஈர்க்கும் திரை இருப்பும்,தேவி ஸ்ரீ பிரசாத்தின் வசீகரிக்கும் பின்னணி இசையும்,அசத்தலான காட்சியமைப்பும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கூடுதலாக, ’அனிமல்’ படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோலின் நடிப்பும் படத்திற்கு இன்னும் வலுச் சேர்த்திருக்கிறது.

இப்படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.இந்தத் தகவல் சூர்யா இரசிகர்களையும் படக்குழுவினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. 

இப்படம் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Posts