சினிமா செய்திகள்

பாபநாசம் 2 படத்தில் நடிக்க கமல் மறுப்பு – காரணம் என்ன?

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் குவித்த படம் திரிஷ்யம்.அப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. அதில் கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இங்கும் அப்படம் வெற்றி பெற்றது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், சீனம் ஆகிய மொழிகளிலும் திரிஷ்யம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2 ஆம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் 2021 ஜூன் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்தப் படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் மொழிமாற்றம் செய்வதாக அறிவித்து உள்ளனர்.

தமிழிலும் திரிஷ்யம் 2 படம் பாபநாசம் 2 என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுவதாகச் சொல்லப்பட்டது.

அதில் கமல்ஹாசனும் மீனாவும் நடிக்கவிருக்கிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.

இப்போது கமல்ஹாசன்,லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல்வாரத்தில் நிறைவடைந்துவிடும்.

அதற்கடுத்து அவர் நடிப்பில் பாபநாசம் 2 படத்தைத் தொடங்கலாம் என்கிற பேச்சுகள் நடக்கின்றனவாம். ஆனால் அப்படத்தில் நடிக்க கமல் மறுத்துவருகிறாராம்.

ஏனெனில், கமல் படங்கள் தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் மொழிமாற்று அல்லது குரல்மாற்று செய்யப்பட்டு வெளியாகும் வாய்ப்புள்ளவை. அவ்வளவு வியாபாரம் இருக்கும்போது சம்பளமும் அதிகமாக வாங்கலாம். இந்தப்படத்தைப் பொறுத்தவரை தமிழில் மட்டுமே வெளியிட முடியும். மற்ற மொழிகளில் வெவ்வேறு நடிகர்களை வைத்து எடுத்துவிடுகிறார்கள்.

எனவே இதன் வியாபாரம் தமிழகம் மட்டுமே என்றாகிவிடுவதால் கமல் எதிர்பார்க்கும் சம்பளத்தைக் கொடுக்கமுடியாது. இதனால் இப்படத்தில் நடிக்க அவர் மறுப்பதாகத் தகவல்.

அவரை சமரசம் செய்து நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடக்கின்றனவாம்.

என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.

Related Posts