இந்தியன் 2 வுக்கு முன்னால் இந்தப்படம் – கமல் திடீர்முடிவு ஷங்கர் அதிர்ச்சி

தேவர் மகன்’ படம் 1992ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க உள்ளார். முதல் பாகத்தை மலையாள இயக்குனர் பரதன் இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார்.
கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்திற்குப் பிறகு ‘தேவர் மகன் 2’ படத்தில் நடிக்க உள்ளார். ‘
இந்தியன் 2’ படப்பிடிப்பு முடிந்ததும் கமல்ஹாசன் இதன் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று சொல்லப்பட்டது.
இந்தியன் 2 படத்தில் ஒப்பனைச் சிக்கல் மற்றும் பட்ஜெட் பிரச்சினை ஆகியன ஏற்பட்டதால் அப்படம் தாமதமாகிறது.
இதனால் இந்தியன் 2 படத்துக்கு முன்பே தேவர்மகன் 2 படத்தை எடுத்துவிடலாம் என்று அதிரடியாக முடிவெடுத்திருக்கிறாராம் கமல்.
இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திடமும் அவர் பேசியிருக்கிறாராம்.
அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.
எனவேதான் கமல் இப்போது மீசையை பெரிதாக வளர்க்கிறாராம்.
இந்தத் தகவலை அறிந்த இயக்குநர் ஷங்கர் பேர்ரதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அவரிடம் பட்ஜெட்டுக்குள் எடுக்கிற மாதிரி,சரியான திரைக்கதையை எழுதி முடியுங்கள்.அதற்குள் தேவர்மகன் 2 படத்தை முடித்துவிடுகிறேன் என்று கமல் சொல்லியிருப்பதாகவும் தகவல்.
.