சினிமா செய்திகள்

16 படங்கள் தயாரிப்பு 17 ஆண்டுகள் இடைவெளி – மீண்டெழுந்த மணிவாசகம் குடும்பம்

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்துப் படங்களையும் இயக்கியவர். அந்தக் கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் கவனிக்கப்பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்து  17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “ களவாணி மாப்பிள்ளை  “   படத்தில்  தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த்

ஒளிப்பதிவு –  சரவணன் அபிமன்யு,இசை –  என்.ஆர்.ரகுநந்தன்,கலை – மாயா பாண்டி, படத்தொகுப்பு  –  பி.கே, நடனம் – தினேஷ், சண்டைப்பயிற்சி – திலீப்சுப்பராயன்,

தயாரிப்பு  –  ராஜேஸ்வரி மணிவாசகம்,

கதை, திரைக்கதை, இயக்கம்  –  காந்தி மணிவாசகம்.

இந்தப் படத்தின் துவக்க விழா இன்று (பிப்ரவர் 7,2018) நடைபெற்றது. படப்பிடிப்பு 15 ம் தேதி பொள்ளாச்சியில் துவங்க உள்ளது. ஜனரஞ்சகமான காமெடி, காதல் கதையாக உருவாக உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Related Posts