அஜித்தின் அடுத்த படம் பற்றிப் பரவும் வதந்தியும் விளக்கமும்
அஜித்தின் அடுத்த படம் குறித்தும் பரவும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட வெற்றிப் படங்களை படங்களை இயக்கிய
வர் எச்.வினோத். இவர் அடுத்ததாக அஜித்தின் தல 59 படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வினோத் இயக்கும் படம் பிங்க் என்கிற இந்திப் படத்தின் ரீமேக் என்றும், புதிய கதை என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இன்னமும் படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், எச்.வினோத் பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் கணக்கில் இருந்து தல 59 படம் ரீமேக் இல்லை என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக எச்.வினோத் விளக்கம் அளித்துள்ளார்.
அதில்,
எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். மற்றபடி என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் எனக்கு கணக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு இயக்குநர் வினோத் கூறியுள்ளார்.











