சினிமா செய்திகள் நடிகர்

அரவிந்த்சாமி படம் தள்ளிப்போனது இதனால்தான்

மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மொழிமாற்றம் இது.

இத்திரைப்படம் இந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருந்தது. தற்போது இந்த படத்தின் வெளீயீடு மே 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதற்குக் காரணம், ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதியன்று வெளியாவதுதான்.

அந்தப்படத்துக்குத்தான் திரையரங்குக்காரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்களாம். எனவே இந்தப்படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்திருக்கிறார்கள்.

Related Posts