சினிமா செய்திகள்

நேரடிப் படத்தை விட இலாபம் தரும் தெலுங்குப் படம்

தெலுங்குநடிகர் அல்லுஅர்ஜுன் நாயகனாக நடித்திருக்கும் படம் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.

தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது.

மே 4 ஆம் தேதி வெளியாகும் இந்தப்படத்தின் தமிழக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி என்கிற நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இந்தப்படம் சுமார் ஐம்பது கோடி செலவில் தயாராகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் தமிழக உரிமை ஐம்பது இலட்சம் என்று சொல்லப்படுகிறது. ஐம்பது கோடி படத்தை ஐம்பது இலட்சத்தில் வாங்கிவிட்டார்கள்.

தமிழிலும் சந்தை மதிப்பைப் பெற்றுவிடவேண்டும் என்பதால் நாயகன் அல்லுஅர்ஜூனின் குடும்பம் இந்தப்படத்துக்குப் பெரிய அளவில் விளம்பரம் செய்யவிருக்கிறது.

இதனால் தமிழகத்திலும் இந்தப்படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என்கிறார்கள்.

ஆகவே, இப்படம் தயாரித்தவர்களைக் காட்டிலும் தமிழக உரிமையை வாங்கியவர்களுக்கு நிச்சயம் இலாபம் என்று சொல்கிறார்கள்.

Related Posts