தீபாவளியை எங்களுடன் கொண்டாடுங்கள் – பிரதீப் அழைப்பு

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 13 அன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி பேசியதாவது….,
மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு முதலில் நன்றி! மைத்திரியுடன் எங்களுடைய நான்காவது படம் இது. இந்தப்படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு வாழ்த்துக்கள். இதைப்போல பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ என ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள். திறமையாளர்கள் மற்றும் நல்லகதைகளை ஏஜிஎஸ் நிறுவனம் எப்போதும் ஆதரிக்கும். அந்தவகையில், இந்தப்படத்தின் சிறு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி என்றார்.
பின்னணி பாடகர்கள் திப்பு & ஹரிணி…..
இந்தத் தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்தவிஷயம் எங்களுக்கே நடப்பதுபோல பெருமையாக உள்ளது. சாயின் கடின உழைப்பிற்கு இன்னும் பெரிய உயரம் செல்லவேண்டும். இந்தவயதில் ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வேலை செய்கிறான் என்றார்.
நடிகர் ஜிபி முத்து…..,
பிரதீப் ரங்கநாதனின் படங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அவரின் ‘டியூட்’ படமும் பார்க்க ஆவலுடன் உள்ளேன் என்று வாழ்த்தினார்.
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி…..,
நானும் இயக்குநர் கீர்த்தீஸ்வரனும் ‘சூரரைப் போற்று’ படத்தில் ஒன்றாகப் பணிபுரிந்தோம். அந்தப்படத்தில் அவர் உதவிஇயக்குநராக இருந்தபோதே அவருடைய ஆர்வம் எனக்கு தெரிந்தது. அந்தப்படம் முடிந்ததும் மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் கீர்த்தியை அறிமுகம் செய்தேன்.அவர்களுக்கும் கீர்த்தி சொன்ன ‘டியூட்’ கதை உடனே பிடித்துவிட்டது. ‘டிராகன்’ படத்திற்கு பிறகு பிரதீப்புடன் இணையும் இரண்டாவது படம் இது. இந்தப்படத்தில் மெச்சூர்டான பிரதீப்பை நீங்கள் பார்ப்பீர்கள். மமிதாவும் பிரதீப்பும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.சரத் சார் சீனியர் நடிகர் என்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் நிரூபித்துள்ளார். இந்தப்படத்திற்கு முன்பிருந்தே சாய் அபயங்களின் மெலோடி பாடல்களுக்கு நான் இரசிகன். படத்தின் தொழில்நுட்பக் குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் எனது அணியினர் அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் சரத்குமார்…..,
அறிமுக இயக்குநராக கீர்த்திஸ்வரனுக்கு தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் மிகப்பெரும் ஆதரவு கொடுத்துள்ளது. எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற துடிப்பு கொண்ட இயக்குநர்- நடிகர் பிரதீப் ரங்கநாதன். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. முதலில் ‘டியூட்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்கமாட்டேன் என்று சொன்னேன்.ஆனால், கீர்த்தி கதை முழுவதும் டெடிகேட்டடாக என்னிடம் சொன்ன பின்பு புதிய சரத்குமாரை இந்தப்படத்தில் காண்பதற்கான முயற்சி இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. படத்தில் மமிதா,சாய் என அனைவருமே சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்றார்.
நடிகை மமிதா பைஜூ…….,
இந்தப்பட வாய்ப்பு கொடுத்த என்னுடைய இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பிரதீப் ரங்கநாதனிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படத்தில் சில காட்சிகள் நடிக்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கும். அப்போது சரத் சார் என்னை கூல் செய்வார். எல்லோரும் தீபாவளிக்கு ‘டியூட்’ படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர்….
இப்படி ஒரு நல்லபடத்தை கொடுத்த இயக்குநர் கீர்த்தீஸ்வரனுக்கு நன்றி.மமிதா மற்றும் சாய் அபயங்கர் எங்கள் பேனரில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. தமிழில் இது எங்களுடைய இரண்டாவது படம். 8 வயது முதல் 80 வயது வரை எல்லா வயதினரும் இந்தப்படத்தை பார்த்து கொண்டாடலாம். லவ், எமோஷன், ஆக்சன், செண்டிமெண்ட் என எல்லா விஷயங்களும் இந்த படத்தில் அமைந்துள்ளது என்றனர்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…..,
ரொம்பவே எமோஷனலாக உள்ளது. எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. என்னுடைய ‘கட்சி சேரா’ பாடல் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கீர்த்தி என்னிடம் கதை சொன்னார். உடனே, அவருடன் வேலை பார்க்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். என்னுடைய முதல்படமே தீபாவளிக்கு வெளியாவது ஸ்பெஷலாக உள்ளது. பிரதீப் ப்ரோ, கீர்த்தி ப்ரோ, மமிதா, என்னுடைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. ‘ஆச கூட…’ பாடலில் மமிதாவை காஸ்ட் செய்யவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், டேட் பிரச்சினைகள் காரணமாக அது முடியாமல் போய்விட்டது. எனக்கு பிடித்ததை செய்ய அனுமதித்த என் பெற்றோருக்கு நன்றி. பாடல்களைப் போலவே பின்னணி இசையும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் கீர்த்தீஸ்வரன்…..,
எல்லோரைப் போலவும் நானும் உதவிஇயக்குநராக, இயக்குநர் சுதா கொங்கராவிடம் 7 வருடங்கள் பணிபுரிந்தேன். ‘டியூட்’ படத்தின் கதை எழுதி முடித்ததும் நண்பரின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்றுதான் நிகேத் பொம்மியிடம் கதை சொன்னேன்.அவர் பயங்கரமாக என்ஜாய் செய்துவிட்டு மைத்ரியிடம் பேசுவதாக சொன்னார்.ஆனால், அப்போதுகூட படம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.பிறகு ஹைதராபாத்தில் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொன்னதும் உடனே அவர்களுக்கு பிடித்துவிட்டது. படத்தில் ‘ஊரும் பிளட்டும்’ பாடல் உருவாவதற்கு முன்பு நமக்கு பிடித்தது போல செய்யலாம். இப்போதுள்ள டிரெண்டுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்றுதான் யோசித்தோம். ஆனால், பாடல் வெளியானதும் மக்கள் எல்லோருக்கும் பிடித்து போய் சென்சேஷன் ஆகிவிட்டது. பழைய சரத் சாராக ஆடல் பாடலுடன் இந்தப்படத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துதான் கதை சொன்னேன். அவருக்கும் பிடித்துவிட்டது. மமிதாவுக்கும் நன்றி. ‘பிரேமலு’, ‘சூப்பர் சரண்யா’வில் என்ன செய்தாரோ அதுவும் இந்தப்படத்தில் இருக்கும். அதை தாண்டி நிறைய எமோஷனாகவும் நடித்துள்ளார் மமிதா. படத்தில் உங்களுக்கு எல்லோருக்கும் பிடித்த பயங்கர ஹைப்பரான பிரதீப்பையும் பார்ப்பீர்கள்.இன்னொரு பக்கம் மெச்சூர்டான, எமோஷனலான இன்னொரு வெர்ஷன் பிரதீப்பையும் பார்ப்பீர்கள். என்னுடைய முதல் படத்திலேயே நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே கொண்டு வர சப்போர்ட் செய்த பிரதீப் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. திரையரங்கில் பார்த்து கொண்டாடும் படியாக லவ், ஆக்சன், எமோஷன், ஹியூமர் என எல்லாமே இந்தப்படத்தில் இருக்கும் என்றார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன்…..
உங்களில் ஒருவனான என்னை மேடையேற்றியதற்கு நன்றி. சரத் சார் இந்தப்படத்தை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.நான் பார்த்து வளர்ந்த ஹீரோ உடன் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. அவருடைய வயசும் எனர்ஜியும் எனக்கு பயங்கர இன்ஸ்பிரேஷன். ‘லவ் டுடே’ படத்திற்காக ஹீரோயின் தேடிக்கொண்டிருந்தபோது மமிதாவை ஒரு ஷார்ட் ஃபிலிமில் பார்த்தேன். ‘லவ் டுடே’ படத்திற்காக அவரை முயற்சி செய்தபோது அவர் ‘வணங்கான்’ படத்தில் பிசியாக இருந்ததால் பிடிக்க முடியவில்லை. ஆனால், ‘டியூட்’ படத்தில் மமிதாதான் நடிக்கிறார் என கீர்த்தி சொன்னபோது சர்ப்ரைஸ் ஆக இருந்தது. இதுவரை பார்க்காத மமிதாவை இந்தப்படத்தில் பார்ப்பீர்கள். நேஹாவும் அற்புதமாக நடித்துள்ளார்.டிராவிட், ரித்து, ரோகிணி மேம் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் ஒரு பெரிய இயக்குநராக கீர்த்தி வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. அவரை என் தம்பி போலதான் பார்க்கிறேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு என்னை பாடவும் வைத்த சாய் அபயங்கருக்கு நன்றி. தீபாவளியை ‘டியூட்’ படத்துடன் கொண்டாடுங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.