சினிமா செய்திகள்

பிரபல தயாரிப்பாளரின் மகன் விவாகரத்து?

கமல் நடித்த இந்தியன், விஜய் நடித்த குஷி, கில்லி அஜீத் நடித்த ஆரம்பம் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம்.

இவருடைய மூத்த மகனும் இயக்குநருமான ஜோதிகிருஷ்ணாவுக்கும் இசைக்குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

அதன்பின் ஐஸ்வர்யா ஏ.எம்.ரதன்ம் தயாரித்த என்னை அறிந்தால்,, வேதாளம், கருப்பன் ஆகிய படங்களில் தயாரிப்புப் பணிகளிலும் பொறுப்பேற்றிருந்தார்.

அவருக்கும் அவர் கணவர் ஜோதிகிருஷ்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்ததாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இருவருக்கும் விவாகரத்து நடந்துவிட்டதென்று சொல்லப்படுகிறது.
இப்போது ஐஸ்வர்யா தனியாக ஒரு படத்தைத் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

Related Posts