சினிமா செய்திகள்

ஏறி அடித்த தனுஷ் இரசிகர்கள் – உலக சாதனை படைத்த ஜகமே தந்திரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறது.

இந்தப்படம், ஜூன் 18 அன்று நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படம் தொடர்பாகப் பேச டிவிட்டர் ஸ்பேஸ் எனும் இணையவெளியில் அழைப்பு விடுக்கப்பட்டது.

சோனி நிறுவனம் ஒருங்கிணைத்த இந்த உரையாடல் நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றிப் பேசினர்.

அதில், யாரும் எதிர்பாராத விதமாக சுமார் பதினேழாயிரம்பேர் அந்த உரையாடலைக் கேட்க வந்திருக்கிறார்கள்.

இது உலக அளவில் புதிய சாதனை என்று சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பாக ஆர்மி ஆஃப் டெட் என்கிற ஆங்கிலப்படத்தின் உரையாடலில் அதிகம் பேர் பங்கு பெற்றனராம்.

அந்தப்ப்படத்தின் சாதனையை தனுஷ் படம் முறியடித்து முன்னே நிற்பதால் தனுஷ் இரசிகர்கள் இதை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

Related Posts