சினிமா செய்திகள்

மணிரத்னம் மகனுக்குக் கிடைக்கும் பாராட்டு

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதனிடையே வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனிடையே, இலண்டனிலிருந்து திரும்பியுள்ள மணிரத்னத்தின் மகன் நந்தன் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 10 அடி தூரம் தள்ளி மகனுடன் சுகாசினி மணிரத்னம் பேசும் காணொலியை குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

அதில் சுஹாசினி மற்றும் நந்தன் இருவரும் பேசியிருப்பதாவது:

சுகாசினி: வணக்கம். நான் சுகாசினி மணிரத்னம். கண்ணாடிக்கு 10 அடி தள்ளி என் மகன் நந்தனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்கு என்ன காரணம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இலண்டனிலிருந்து 18 ஆம் தேதி சென்னை வந்தார். கரோனா வைரஸ் பரவக் கூடாது என்று, வந்ததிலிருந்து இந்த அறைக்குள்தான் இருக்கிறார்.

நந்தன்: நான் புதன்கிழமை சென்னை வந்தேன். இந்த ரூம், பக்கத்திலிருக்கும் பெட்ரூம் இரண்டிலும்தான் இருக்கிறேன். கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. எவ்வளவு போராடித்தாலும் வீட்டிற்குள் இருப்பது சின்ன விஷயம்தான். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 2 வாரம் யாருடன் பழகாமல் தூரத்திலேயே இருந்து, அதாவது தனிமையில் இருக்க வேண்டும். யார்கிட்டயும் போகாமல் 5 ஆவது நாளாக இருக்கிறேன். இன்னும் 9 நாட்கள் இருக்கிறது. சாப்பாடு கூட அந்த அறையில் வைத்துவிட்டு, வைத்தவர்கள் சுத்தமாகக் கையைக் கழுவிவிடுவார்கள். நானும் சுத்தமாகக் கையைக் கழுவிவிட்டுத்தான் சாப்பிடுவேன். தனிமையாக இருப்பது சின்ன கஷ்டம்தான். ஆனால், எல்லாருமே எடுத்துத்தான் ஆக வேண்டும்.

இவ்வாறு குஷ்பு வெளியிட்ட வீடியோவில் சுகாசினி – நந்தன் இருவரும் பேசியுள்ளனர்.

இதனால் மணிரத்னம் மகனைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.

Related Posts