November 2, 2024
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் தமிழ் 8 தொடங்கியது – முதல்நாளிலேயே விஜய்சேதுபதி கொடுத்த அதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில்,கடந்த 7 வருடங்களாக நடந்துவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8 ஆவது பாகம் அக்டோபர் 6 அன்று ஆரம்பமானது.ஏழாண்டுகளாக நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்துவந்தார்.இந்த முறை, நடிகர் விஜய்சேதுபதி தொகுப்பாளராகக் களமிறங்கி புதிய போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கினார். 

இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அர்னவ், அருண், சந்தோஷ் பிரதாப்,கோகுல்நாத்,ரவீந்தர் சந்திரசேகர்,தீபக்,நடிகர் ரஞ்சித்,ஐஸ்வர்யா,பவித்ரா ஜனனி,பால் டப்பா,ஜாகுலின்,அன்ஷிதா,செளந்தர்யா நஞ்சுண்டன்,ஷாலின் சோயா,தர்ஷா குப்தா,சஞ்சனா,சுனிதா ஆகியோர் இந்த எட்டாம்பாகத்தில் பங்கேற்கிறார்கள்.

அவர்களை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி, அவர்கள் ஒவ்வொருவரிடமும் நண்பனைப்போல் மிக இயல்பாக உரையாடி, அவர்களின் பின்னணி, அவர்கள் பிக்பாஸ் வந்த காரணம் என எல்லாவற்றையும் கேட்டறிந்து, உற்சாகப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது.

மேலும் போட்டியாளர்கள் தவறு செய்தால் நான் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டேன் என அதிரடியும் காட்டினார். 

பிக்பாஸ் விளையாட்டை ஆரம்பித்த விஜய் சேதுபதி இந்தமுறை உலகத்தில், நாட்டில், வீட்டில் என சமூகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்களா? பெண்களா? எனும் தீம் நம் பிக்பாஸில் அறிமுகமாகிறது என ஆச்சரியப்படுத்தினார்.
 
இந்த முறை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட வீட்டில், வீட்டின் நடுவே ஒரு பெரிய கோடு கிழிக்கப்பட்டு, ஒரு பக்கம் கிச்சனுடன் பெட்ரூம் வரிசையும், இன்னொரு புறம் டாய்லெட்டுடன் பெட்ரூம் வரிசையும் என,  இரண்டு பெட்ரூம்கள் வரிசைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல் ஆறு போட்டியாளர்கள் நுழைந்ததும், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அவர்களுக்கு பெட்ரூம்களை தேர்ந்தெடுக்கச் சொல்லப்பட்டது. ஆரம்ப எபிஸோடிலேயே ஆண்களா? பெண்களா?  என விளையாட்டு களை கட்டியது. 
இருவரும் சிங்கிள் பெட் ரூம்கள் இருக்கும் அறையையே தேர்ந்தெடுக்க, ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமானது. 

புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா? பெண்களா?  எனும் விவாதத்தை விஜய் சேதுபதி, எப்படிக் கொண்டு செல்லப் போகிறார் எனும் ஆவல் பார்வையாளர்களிடம் அதிகரித்துள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதியதொகுப்பாளர் விஜய் சேதுபதி.

இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டிற்குள் நுழைந்த உடனே அறிவிக்கப்பட்ட வெளியேற்றம், வீட்டுக்குள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. 

போட்டியாளர்கள், இரசிகர்கள் என எவருமே எதிர்பாராத இந்த அறிவிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை, முதல் எபிஸோடிலேயே உச்சத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளது. 

புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா?  எனும் விவாதத்துடன் யார் வெளியேறப்போகிறார் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Related Posts