பிக்பாஸ் 3 நிகழ்வுகள் – கடும் அதிர்ச்சியில் கமல்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிவிரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள்.
அதை அறிவித்து விட்டு அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதாம்.
அந்தப்பணிகளின்போது முதலிரண்டு பாகங்களின் போது இல்லாத வகையில் புதிய அதிர்ச்சியைச் சந்திக்கிறதாம் தேர்வுக்குழு.
முதலிரண்டு பாகங்களின் போது நிகழ்ச்சியில் கலந்து நான் நீ எனப் போட்டிபோட்டுக் கொண்டு நடிகர்கள் வந்தார்களாம். ஆனால் இம்முறை வளரும் நடிகர்கள் சிலரை அணுகியபோது,அய்யா ஆளைவிடுங்கள் என்று ஒதுங்கிக் கொண்டார்களாம்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதால் கிடைக்கும் பலனைவிட பலவீனமே அதிகம் என்பதால் பலரும் பின்வாங்குகிறார்களாம்.
அதோடு இந்த நிகழ்ச்சி குறித்து வெளியான அறிவிப்புக்கும் போதிய வரவேற்பில்லை என்பதால் தொலைக்காட்சி நிர்வாகம் கலகலத்துப் போயிருக்கிறதாம்.
இந்த விவரங்களை அறிந்த கமலும் அதிர்ச்சியடைந்திருக்கிறார் என்கிறார்கள்.











