October 30, 2025
சினிமா செய்திகள்

ஆச்சரியமூட்டும் அயலான் – தமிழ்நாடு வியாபார விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் அயலான். இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ள இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இப்படம் 2024 பொங்கல்திருநாளையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையின் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதற்குமான விநியோகஸ்தர்கள் விவரமும் வியாபாரமான தொகையும் (உத்தேசமாக)…

சென்னை நகரம் – கற்பகவிநாயகா ஃபிலிம் சர்க்யூட், தொகை சுமார் நான்கு கோடி
செங்கல்பட்டு – அருள்பதி, தொகை சுமார் பத்துகோடி
நார்த் செளத் – சீனு, தொகை சுமார் ஐந்து கோடி
திருச்சி – கிரீன்ஸ்கிரீன் நாராயணசாமி, தொகை சுமார் நான்கு கோடி
மதுரை – சுஷ்மா சினிமா + ராக்போர்ட், தொகை சுமார் ஐந்து கோடி
கோவை – காஸ்மோசிவா, தொகை சுமார் ஆறரை கோடி
சேலம் – 5 ஸ்டார் செந்தில், தொகை சுமார் மூன்றேகால்கோடி
திருநெல்வேலி – சியான் ஃபிலிம்ஸ், தொகை சுமார் இரண்டரை கோடி

இவற்றில், ஒரிரு பகுதிகள் டிஸ்டிரிபியூசன் என்றும் மற்ற பகுதிகள் பெரும்பாலும் எம்ஜி எனப்படும் மினிமம்கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் நடந்திருக்கிறது.

பொங்கல் நாளில் அயலான் மட்டுமின்றி ரஜினியின் லால்சலாம்,தனுஷின் கேப்டன் மில்லர்,சுந்தர்.சியின் அரண்மனை 4,விஜய்சேதுபதியின் மேரிகிறிஸ்துமஸ் ஆகிய நான்கு படங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையிலும் இந்தப்படத்தின் வியாபாரம் எம்ஜி அடிப்படையில் சுமார் நாற்பது கோடியைத் தாண்டி நடந்திருப்பது வியப்பூட்டும் நிகழ்வு என்று திரைப்பட வியாபார வட்டாரம் கூறுகிறது.

இது அயலான் படக்குழுவினருக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

Related Posts