செய்திக் குறிப்புகள்

அருண்விஜய் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இரசிகர்கள் கொண்டாட்டம்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது இல்லையே’ – மிஷன்  சாப்டர் 1.

இந்தப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நாயகிகளாகவும் இவர்களூடன் அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின்,கதை மற்றும் திரைக்கதை எழுதியிருப்பவர் ஏ.மகாதேவ். இப்படத்துக்கு வசனங்களை விஜய் எழுதியுள்ளார்.

சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்தின் படத்தொகுப்பை அந்தோணி செய்கிறார்.சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வாவும்,கலை இயக்குநராக சரவணன் வசந்த்தும் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தினை எம். ராஜசேகர் & எஸ்.சுவாதி ஆகியோர் தயாரித்துள்ளனர். வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன்
ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து இன்று வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்…..

சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் எப்போதும் நல்ல படங்களுக்கு மதிப்பு தரக்கூடியது. தனித்துவமான கதைகள் மற்றும் நம்பிக்கைக்குரிய உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது. இதன் மூலம் இதுபோன்ற திட்டங்களுக்கு பிரம்மாண்டமான வெற்றியை சேர்க்கிறது.

லைகா புரொடக்‌ஷனின் இந்தச் சுற்றின் சமீபத்திய வரவாக எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரிப்பில், நடிகர் அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம்  இணைந்துள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது. மொழிகளைத் தாண்டி, அனைத்துத் தரப்பினருக்கும் போய்ச் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது.

இப்படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.  

பாராட்டும்படியான படைப்புகளை சரியான திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் இலண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார் ஆகியன இப்படத்தின் சிறப்பம்சங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பை அருண்விஜய் இரசிகர்கள் கொண்டாட்டத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

Related Posts