சினிமா செய்திகள்

அரசன் படப்பிடிப்பு தொடங்குகிறது – ஆச்சரியமூட்டும் புதிய தகவல்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன்.கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினெட்டு நாட்கள் நடந்தன.

அதற்கடுத்து, சனவரி மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.அதன்பின், சனவரி 26 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்கள்.ஆனால்,சனவரி போய் பிப்ரவரி முடிந்து இப்போது மார்ச் மாதமும் தொடங்கிவிட்டது.

படப்பிடிப்பு எப்போது?

மார்ச் 15 ஆம் தேதிக்கு மேல் அதாவது மார்ச் 16 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு முழுக்க சென்னையிலேயே நடக்கவிருக்கிறதாம்.இம்முறை பெரும்பகுதிப் படப்பிடிப்பை முடித்துவிடும் வகையில் நீண்டபடப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் பார்த்துக் கொண்டிருப்பதால் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறார்களாம்.அதனால் மார்ச் 15 ஆம் தேதியையொட்டி ஓரிரு நாள் முன்பின்னாகப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இதில் விஜய்சேதுபதி இருக்கிறாரா என்றால்? இருக்கிறார்.ஆனால், படப்பிடிப்பு தொடங்கும்போது இருக்கும்போது இருக்கமாட்டார்.தொடங்கி சுமார் ஒரு வாரம் கழித்து அவர் கலந்து கொள்வார் என்கிறார்கள்.

இப்போது படத்தில்,நடிகர் விக்ராந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியியிருக்கிறாராம்.இந்தப் படப்பிடிப்பில் அவர் முழுமையாக இருப்பார் என்று சொல்கிறார்கள்.

அதேபோல், படத்தில் சிம்புவுடன் ஒரு சிறுவன் இருப்பது போன்று கதை இருக்கிறதாம்.படத்தின் அடிப்படைக்கதைக்குப் பலம் சேர்க்கும் விதமான அந்தச் சிறுவன் கதாபாத்திரம் இருக்குமென்று சொல்லப்படுகிறது.மிக முக்கியமான அந்த வேடத்தில் நடிக்க வைக்க நிறையப் பேரைப் பார்த்திருக்கிறார்கள்.யாரும் சரியாக வரவில்லையாம்.இப்போது அந்த வேடத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமார் சிம்ரனின் மகனாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற கமலேசு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இப்போது தொடங்கவிருக்கும் படப்பிடிப்பில் சிம்பு, சிறுவன் கமலேசு சம்பந்தப்பட்ட காட்சிகள் பெருமளவில் படமாகவிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

இவற்றைத்தாண்டி, இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்கும் இயக்குநர் நெல்சனும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறாராம்.
இன்னும் சில மாதங்களில் கமல் ரஜினி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை அவர் தொடங்க வேண்டியிருப்பதால் அவரை வைத்து எடுக்கவேண்டிய காட்சிகளை இப்போதே எடுத்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.அதற்கேற்பத் திட்டமிடுவதால் அதனால் அவரும் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார்.

இதனால்,சிம்பு,விஜய்சேதுபதி,விக்ராந்த்,சிறுவன் கமலேசு,நெல்சன் ஆகியோர்ரால் அரசன் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு களைகட்டவிருக்கிறது.

சிம்பு இரசிகர்களுக்கும் திரைப்பட இரசிகர்களுக்கும் உற்சாகம் தரக்கூடிய பல நிகழ்வுகள், காட்சிகள் ஆகியனவற்றை எதிர்பாருங்கள் என்று படக்குழு தரப்பில் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

நல்லது.நடக்கட்டும்.

Related Posts