சினிமா செய்திகள்

அரசன் படத்தின் நாயகி இவர்தான் – புதிய தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினெட்டு நாட்கள் நடந்தன.

இந்நிலையில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நேற்று தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்.டிஆர் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு,சிலம்பரசன்.டிஆர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன்.டிஆர்,விஜய் சேதுபதி,ஆண்ட்ரியா ஜெர்மியா,சமுத்திரக்கனி,விக்ராந்த்,கிஷோர்,சைத்ரா ஜே.ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகிவரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். 

இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.இதைத் தொடர்ந்து தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.இதில் சிலம்பரசன்.டிஆர் கலந்து கொண்டிருக்கிறார்.இது தொடர்பான புகைப்படத்தை சிலம்பரசன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதால் இரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இதனிடையே மதுரையில் நடைபெற்ற’அரசன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பில் சிலம்பரசன்.டிஆர் – ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கான சீருடை அணிந்து நடித்திருக்கிறார் என்பதும்,இப்போது அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னை டி.நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வெற்றிமாறனின் வடசென்னை சினிமாடிக் யுனிவர்ஸாக குறிப்பிடத்தக்க வகையில் ‘அரசன்’ உருவாகி வருகிறது என்பதும் இப்படத்தின் கதையை ‘பொல்லாதவன்’ படத்திற்கு முன்பே இயக்குநர் வெற்றிமாறன் எழுதி நிறைவு செய்திருப்பதால் தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இந்த ஆண்டின் இறுதியிலேயே இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் படப்பிடிப்புப் பணிகள் திட்டமிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இப்படத்தின் நாயகி யார்? என்கிற கேள்விக்கும் உறுதியான விடை தெரிந்திருக்கிறது.

இப்படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள்.அவற்றில் ஒருவராக சைத்ரா.ஜே.ஆச்சார் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார்.அவர் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார் என்று சொல்கிறார்கள்.இன்னொரு நாயகியாக சமந்தா அல்லது சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில்,யாரும் எதிர்பாராதவிதமாக இப்படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.அவரை சோதனைப் படப்பிடிப்பு நடத்தி இயக்குநர் சம்மதம் சொல்லிவிட்டார் என்றும் அதனால் அவருடன் ஒப்பந்தம் செய்து நடிக்க வைக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts