சினிமா செய்திகள்

அட்லியை நிராகரித்த அல்லுஅர்ஜுன் – காரணம் என்ன?

இயக்குநர் அட்லி, ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அதன் பின்னர், விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

அதன் பின்னர் விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் அப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதற்காக அல்லுஅர்ஜுனிடம் ஒரு கதைக்கருவை அட்லி சொன்னாராம். அது அவருக்குப் பிடித்திருந்ததால் அதற்கான திரைக்கதை உருவாக்கும்படி கேட்டிருந்தாராம்.

இந்நிலையில் அந்தக்கூட்டணி முற்றிலும் முறிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம், அட்லிதான் என்கிறார்கள்.

அந்தப்படத்துக்காக முப்பத்தைந்து கோடி சம்பளம் கேட்டாராம். அதோடு நின்றிருந்தால் குற்றமில்லை, கூடவே வியாபாரத்திலும் குறிப்பிட்ட விழுக்காடு பங்கு வேண்டும் என்றும் கேட்டாராம்.

இதனால் கடுப்பான அல்லுஅர்ஜூன், அட்லியோடு இணைந்து படமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.

எனவே இப்போது ஷாருக்கான் படத்தை முடித்ததும் விஜய் படம்தான் இருக்கும் என்கிறார்கள். அந்தப்படத்தை இயக்குவதற்கும் அட்லி கேட்கும் சம்பளத்தால் பேச்சுவார்த்தை இன்னும் நிறைவுபெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts