மீண்டும் வரும் நடிகர் நேதாஜிபிரபு – விவரம்
சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகி வெளியான படம் ஒளடதம்.அந்தப்படம் மூலம், தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் நேதாஜி பிரபு.
அந்தப் படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு.சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில் அவர் அட்டகாசமான ஒரு புகைப்படப் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.
தனது தோற்ற மாற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி, முறுக்கேற்றி,சுமார் ஓராண்டாக தாடி வளர்த்துள்ளார்.
புகைப்படப் படப்பிடிப்பையே திரைப்படப் படப்பிடிப்பு போல் நடத்தியுள்ளார். எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி படங்கள் எடுத்துள்ளார்.
இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில்500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். இதுவரை யாரும் செய்யத் துணியாத வகையில் இந்த போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார் என்று புகைப்படக் கலைஞர்கள் சொல்கிறார்கள்.
இதன் மூலமாக தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த கணக்கைத் தொடங்குவதற்கு ஆர்வமாகக் களம் இறங்கி உள்ளார் நேதாஜி பிரபு.
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்கக் கூடிய வகையில் உடல், உள்ளம், தோற்றம், ஆர்வம், ஈடுபாடு ,அர்ப்பணிப்பு, என அத்தனை கோணங்களிலும் தன்னை முழுத்தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்துள்ளார்.
திரைத்துறை என்பது தன்னை நோக்கிக் காதலுடனும் அர்ப்பணிப்புடனும் வருபவர்களைக் கைவிடாது என்பதற்கு உதாரணமாக அவர் இதைச் செய்துள்ளார்.
திரைத்துறையை யாரும் ஏனோ தானோ என்றோ அலட்சியமாகவோ பார்க்கக் கூடாது.தனக்கான தகுதி உள்ளவர்களை அது அணைத்துக் கொள்ளும் என்பதைச் சொல்லும் வகையில் இதைச் செய்துள்ளார்.இதைப் பார்க்கும்போது இதுநாள் வரை படை திரட்டி வந்தவர், இப்போது போர் தொடுக்கவிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.
இப்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர்,விரைவில் புதியபட அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.











