சினிமா செய்திகள்

விஷாலை விட்டுவிட்டு சிம்புவிடம் போன இரண்டாவது இயக்குநர்

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர்.

இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொன்னார்கள். அந்தப்படத்தை கே.பி.ஃபிலிம்ஸ் பாலு தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்பட்ட அந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருக்கிறது என்றும் சொன்னார்கள்.

ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் ஆகும் என்பதால் இப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்து கே.பி.ஃபிலிம்ஸ் பாலு விலகிக் கொண்டார்.

அதன்பின் தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத், இப்படத்தைத் தயாரிக்க முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தினாராம். அவரும் படத்தின் பட்ஜெட்டைக் காரணம் சொல்லி விலகிக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

அதன்பின் விஷாலே இப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அப்படம் தொடர்பாக வேறுவிதமாகச் செய்திகள் வருகின்றன.

ஆனந்த்ஷங்கர் இயக்கிய நோட்டா படத்தைத் தயாரித்த ஞானவேல்ராஜா இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறார் என்றும் சிம்பு கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்றும் பேசப்படுகிறது.

அப்படி நடந்தால், ஏற்கெனவே விஷாலிடம் கோபித்துக்கொண்டு சிம்புவிடம் போனார் மிஷ்கின் இரண்டாவதாக இப்போது ஆனந்த்ஷங்கரும் விஷாலை விட்டுவிட்டு சிம்புவிடம் போகிறார் என்று சொல்லப்படும்.

Related Posts