சினிமா செய்திகள்

தீவிர சிகிச்சையில் திருப்பூர் சுப்பிரமணியம்

தமிழ்த்திரையுலகின் முன்னணி விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல சங்கங்களில் பொறுப்பு வகித்தவர், ரஜினியின் நம்பிக்கைக்குரியவர் என்கிற பல்வேறு அடையாளங்களைக் கொண்டவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் (South Indian Film Financiers Association – SIFFA) தலைவராக திருப்பூர் சுப்ரமணியம் இருக்கிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இவருடைய திரையரங்கு, அலுவலகம், வீடு, தோட்டம் உள்ளிட்ட 17 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் உள்ளிட்ட பல படங்களின் வெளியீட்டு நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியவர்.

இப்போது அவர் கடும் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கிறாராம்.

கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts