செய்திக் குறிப்புகள்

தனுஷுக்கு மிக்க நன்றி – நெகிழும் சினேகா

மிக நீண்ட காலத்திற்குப் பின் நடிகை சினேகா தமிழ்தித்ரை உலகில் எல்லோராலும் பேசப்படும், பாராட்டப் படும் நிலைக்கு வந்து இருக்கிறார் என்றால் மிகை ஆகாது.

பொங்கலுக்கு வெளியான “பட்டாஸ்” படத்தில் தனுஷ் மற்றும் சினேகாவின் நடிப்பு பெரும் பாராட்டைப்பெற்று வருகிறது.

தமிழகத்தின் தொன்மைமிக்க தற்காப்புக் கலையான “அடிமுறை” கலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் “பட்டாஸ்” படத்தில் நடிகை சினேகா முறைப்படி “அடிமுறை” கலையை அட்டகாசமாக செய்திருப்பது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாயடைக்கச்செய்துள்ளது.

இது குறித்து நடிகை சினேகா கூறியதாவது …

இந்தப்பாராட்டு அனைத்தும் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு உரித்தானது. அவர் தான் இப்படியொரு மிகச்சிறந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கி, அதில் என்னை நடிக்கவும் வைத்தார்.

நடிகர்களுக்கு சவால் தரும் பாத்திரத்தை உருவாக்கி, அதில் நம்மை பிரகாசிக்கச் செய்வது இயக்குநர்தான்.

அதுவும் முன்னணி நடிகரான தனுஷ் நடித்திருக்கும் படத்தில் அவருக்கு இணையான ஒரு கதாப்பாத்திரத்தை எனக்கும் தந்து, இன்று இத்தனை பாராட்டையும் பெற்றுத் தந்திருக்கிறார்.

“அடிமுறை” கலையை எனக்குச் சொல்லி தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் பெருமை பேசும் இப்படியொரு படத்தில் நானும் பங்கு கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சி.

இன்று உலகின் தொன்மையான தற்காப்புக் கலை தமிழகத்தின் “அடிமுறை” என்பது இப்படம் மூலம் பதிவாகியிருக்கிறது. இது நம் அனைவருக்கும் பெருமையே.

இந்நேரத்தில் படத்தில் அதிக கனம்மிகுந்த பெண்பாதிரத்திற்கு இடம் தந்து, எனக்கும் வெளிச்சம் விழக் காரணமாயிருந்த நடிகர் தனுஷ்க்கு மிக்க நன்றியைத்தெரிவித்துகொள்கிறேன்

என்றார்.

Related Posts