விஜய்யுடன் டிராபிக்ராமசாமி சகாயம் இணைவார்களா? – எஸ்.ஏ.சி பேட்டி
காஞ்சிபுரம் – விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த திரைப்பட இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி….
அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை – மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாகச் செய்யாதீர்கள், அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவசப் பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் மாறிக் கொண்டே வருகின்றது. அதனால் மக்களிடம் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் வெற்றியடைய முடியும்.
நாட்டைக் காக்க நல்லவர்கள் ஒன்று சேரவேண்டும். டிராபிக் ராமசாமி ஐஏஎஸ் சகாயம் போன்ற சமூக ஆர்வலர்கள் உடன் விஜய் இணைய சாத்தியமில்லை
குடி உரிமைச் சட்டத் திருத்த மசோதா மிகவும் குழப்பமாக உள்ளது .அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.அதைப் பற்றி கருத்துக் கூற இயலவில்லை.
கடந்த நான்கு ஐந்து வருடமாக திரைப்படத்துறை அழிவை நோக்கி மிக மோசமாகச் சென்று கொண்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் சரியாக செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது .
அரசு அதிகாரிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் முதல் கொண்டு நடிகர்கள் சங்கம் வரை அனைத்திலும் தலையிடுகிறார்கள். இது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.











