கமல் 60 நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் டிவி கொடுத்த விலை
நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் நவம்பர் 7 ஆம் தேதி. அதோடு அவருடைய கலையுலகப் பயணத்தின் அறுபதாம் ஆண்டு.
இவற்றையொட்டி நவம்பர் 7 அன்று பரமக்குடியில் கமல் அப்பா சீனிவாசனின் சிலை திறப்புவிழா நடந்தது.
நவம்பர் 8 அன்று, சென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்புவிழா நடந்தது.
நேற்று ( நவம்பர் 17 ) நேரு உள்விளையாட்டரங்கில் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியோடு கமல் 60 விழா நடைபெற்றது.
கமல் 60 நிகழ்ச்சியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
நவம்பர் 17 அன்று நடந்த அந்நிகழ்ச்சியை மூன்று பகுதிகளாக ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கிறதாம் விஜய் தொலைக்காட்சி.
நவம்பர் 23 ஆம் தேதி முதல்பகுதி ஒளிபரப்பாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்காக சுமார் மூன்றரை கோடியை ராஜ்கமல் நிறுவனத்துக்குக் கொடுத்து இந்த உரிமையைப் பெற்றிருக்கிறதாம் விஜய் தொலைக்காட்சி.
இதுதவிர இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நுழைவுச்சீட்டுகளை விற்கும் உரிமையை ஒரு தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்து அதன் மூலம் சில கோடிகள் வருமானம் பெற்றிருக்கிறதாம் ராஜ்கமல் நிறுவனம்.










