வெளிநாட்டில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு – மணிரத்னம் முடிவு
இயக்குநர் மணிரத்னம், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கவுள்ளார்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், அமிதாப் பச்சன், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார், கலை இயக்குநராக தோட்டா தரணி பணியாற்றவுள்ளார்.
இப்ப்டத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாத மத்தியில் தொடங்கவிருக்கிறதாம்.
வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் தொடங்கவிருக்கிறது.
இந்தப்படத்துக்கு வெளிநாடு போவது எதனால்? என்றால், அங்கு அடர்ந்த காடுகளும் யானை,குதிரை உள்ளிட்ட விலங்குகளும் எளிதாகக் கிடைக்கின்றனவாம்.
அதோடு படப்பிடிப்புக்கான அனுமதி பெறுவதும் மிக எளிமையாக நடந்துவிடுகிறதாம்.
எனவே அந்நாட்டைத் தேர்வு செய்த மணிரத்னம், அங்கேயே பெரும்பகுதிப் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறாராம்.











