சினிமா செய்திகள்

பிகில் பட ரிலீஸ் – கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தீபாவளி அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் படத்தை இரண்டு நாட்கள் முன்னதாக வெள்ளிக் கிழமையே வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். 

இப்போது அதில் ஒரு மாற்றம் நடந்திருக்கிறதாம். இன்னும் ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமையே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.

வழக்கமாக பண்டிகை நாளுக்கு முன்பே படத்தை வெளியிடுவதில் உடன்பாடில்லாதவர் விஜய். இப்போது மூன்று நாட்கள் முன்னதாகவே படத்தை வெளியிடும் முடிவை அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரும் ஒப்புக்கொண்டாராம்.

முதல் மூன்று நாட்களில் ரசிகர்கள் படம் பார்த்துவிட்டால் தீபாவளி நாளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் படம் பார்க்கும் வாய்ப்பு இருக்கும் என்று சொல்லியே விஜய்யை  ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.

ஆக, அக்டோபர் 24 ஆம் தேதி வியாழக்கிழமையே பிகில் படம் வெளியாவது உறுதி என்கிறார்கள். 

Related Posts