நடிகை கஸ்தூரியின் தவறான கருத்தும் குஷ்புவின் திருத்தமும்
விநாயகர் சதுர்த்தியையொட்டி தன் வீட்டு பூஜையறை படத்தை நடிகை குஷ்பு வெளியிட்டிருந்தார். அதில்
விநாயகர் உள்ளிட்ட கடவுள் படங்கள் இருந்தன.
அதற்கு, மும்பையில் பிறந்த முஸ்லிம் பெண், தமிழகத்தை சேர்ந்த இந்து குடும்பத்தில் இணைந்திருக்கிறார். அன்பே கடவுள் என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டிருந்தார்.
இதை மறுத்து நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது…
நீங்கள் சொன்னதில் சின்ன திருத்தம், மும்பையில் பிறந்த இந்தியன் தமிழகத்தில் பிறந்த இன்னொரு இந்தியரை திருமணம் செய்தார் என்று சொல்லுங்கள் எனக் கூறியிருக்கிறார்.
இதனால் கஸ்தூரிக்கு சரியான பாடம் புகட்டிவிட்டார் குஷ்பு என்று பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.











