சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படத்தில் தொடர் மாற்றங்கள் – பயத்தில் படக்குழு

விஜய் சேதுபதி நடிக்கும் 33 ஆவது படத்தை பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார்.

ஜூன் மாதம் அப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பழனியில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டி சென்று படப்பிடிப்பு நடத்தினர்.

இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரிக்கிறார்.

இசையை மையமாகக் கொண்ட இக்கதையில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக அமலாபால் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அதிலிருந்து வில்கிக் கொண்டார். அவருக்குப் பதிலாக மேகா ஆகாஷ் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமியும் கலை இயக்குநராக ஜான் பிரிட்டோவும் பணியாற்றினர்.

முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே கலை இயக்குநர் ஜான் பிரிட்டோ மாற்றப்பட்டு ராமலிங்கம் கலை இயக்குநராக நியமிக்கப்பட்டாராம்.

முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ராமலிங்கமும் மாற்றப்பட்டு வீரசமர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அதோடு படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியும் மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக கயல் படத்தில் பணியாற்றிய வெற்றி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

விஜய்சேதுபதி 33 படத்தில் நடக்கும் இந்த தொடர் மாற்றங்களால் படக்குழுவினர் பயத்துடனே இருக்கிறார்களாம்.

Related Posts