மூன்றாவது வெற்றி உறுதியானது – ஜெயம் ரவி படக்குழு உற்சாகம்
ஜெயம்ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் கோமாளி.
இந்தப்படம் ஆகஸ்ட் 15 ஆம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் 16 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து மீள்பவராக ஜெயம்ரவி நடித்திருக்கிறார் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது.
மிகவும் சுவாரசியமான திரைக்கதை என்பதால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கையாக இருக்கிறார்கள்.
2018 ஆம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக், அடங்க மறு ஆகிய இரண்டு படங்களும் வெற்றி என்பதால் விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்தப்படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் அதே ஆக்ஸ்ட் 15 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த சுசீந்திரனின் கென்னடி கிளப் திரைப்படம் ஒரு வாரம் தள்ளிப் போயிருக்கிறது.
இந்த தள்ளிப்போதல் கோமாளி படத்தின் வெற்றியை மேலும் உறுதியாக்கியிருக்கிறதென்றும் ஜெயம் ரவி ஹாட்ரிக் வெற்றியை அடையப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.











