சினிமா செய்திகள்

அரண்மனை 3 படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் இதுதான்

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை என்கிற பேய்ப் படம் 2 பாகங்கள் வந்துள்ளன.இந்நிலையில், அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார்.

தற்போது விஷால், தமன்னா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இநதப்பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இந்தப் படம் முடிந்ததும் அரண்மனை 3 ஆம் பாகத்தின் வேலைகள் தொடங்குமாம்.

அரண்மனை 3 படத்தை சன்பிக்ச்ர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

முதலிரண்டு பாகங்களும் வெற்றி என்பதால் மூன்றாம் பாகத்தைத் தயாரிக்க பல் நிறுவனங்கள் முன்வந்தன. ஆனாலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சுந்தர்.சி தேர்வு செய்துள்ளார் என்று சொல்கிறார்கள்.

Related Posts