ரஜினியின் அடுத்த படம் தயாரிப்பாளர் இவர்தான்
ரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
இதுவரை ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூவமாக எந்தத் தகவலும் இல்லை.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் தற்போது நேர்கொண்டபார்வை இயக்கியிருக்கும் எச்.வினோத் ஆகியோர் ரஜினியின் பரிசீலனையில் இருக்கும் இயக்குநர்கள் என்று சொல்லப்படுகிறது.
இவர்கள் சொல்லும் திரைக்கதையே ரஜினியின் அடுத்த இயக்குநர் யார்? என்பதை முடிவு செய்யும்.
இய்க்குநர் யாராக இருந்தாலும் சரி, ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர்தான் என்று திரையுலகில் சொல்லப்படும் பெயர் கலைப்புலிதாணு.
இவர் கபாலி திரைப்படத்தைத் தயாரித்தார், காலா திரைப்படத்தை வெளியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று ரஜினியின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
அதன் காரணமாகவே ரஜினி தன் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை கலைப்புலி தாணுவுக்குக் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.











