மாபெரும் பிரமாண்ட கூட்டணி – உறுதியானது விஜய் 65
இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறாராம்.
இந்தப்படத்தைத் தயாரிக்க சன் பிகசர்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம்.
முதல்வன் 2 படத்தின் நாயகன் விஜய். அவர் அட்லீ ,லோகேஷ் ஆகியோரது படங்களை முடித்துவிட்டு வருவதற்குள் ஷங்கர் முழுமையாகத் தயாராகிவிடுவார், இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று சொல்லப்பட்டது.
தொடக்க நிலை பேச்சுவார்த்தையில் இருக்கும் இப்படம் வேகமாக வளர்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டது. இப்போது அது உறுதியாகியிருக்கிறது.
விஜய் 65 படத்தை ஷங்கர் இயக்குகிறார். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக முதல்பிரதி அடிப்படையில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இயக்குநரில் பிரமாண்டம் ஷங்கர் தயாரிப்பில் பிரமாண்டம் சன் பிக்சர்ஸ் மற்றும் கலைப்புலி தாணு, வசூலில் பிரமாண்டம் விஜய். இந்த நான்கு பிரமாண்டங்களும் ஒரு படத்தில் இணைகிறதென்றால் அது மாபெரும் பிரமாண்டமாக அமையும் என்பதில் மாற்றமில்லை.









