சினிமா செய்திகள்

தரணி ஆள வா தளபதி – விஜய்க்கு ஏ.ஆர்.முருகதாஸ் அழைப்பு

ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள். அதையொட்டி அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளியாகவிருக்கிறது.

அதனால் அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் திரைப்படங்களுக்கு வடிவமைப்பு செய்யும் கிளிண்டன் என்பவர், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் எல்ல்லோரும் பயன்படுத்துகிற மாதிரியான ஒரு வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறார்.

அவ்வடிவமைப்பில்,இலட்சக்கணக்கானோர் உயர்த்திப் பிடிக்கிற இடத்தில் விஜய்யை வைத்து, தரணி ஆள வா தளபதி என்று எழுதியிருக்கிறார்.

இவ்வடிவமைப்புக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது, அதற்குக் காரணம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதை வெளியிட்டதுதான்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று சொல்லி அதனைப் பகிர்ந்திருக்கிறார்.

இதை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts