சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இவரா? – கசிந்த செய்தியால் பரபரப்பு

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது.

இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார்.

இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது.

அதேபோல் கமல்தான் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார்.

ஜூன் 23 முதல் மூன்றாம்பாகத்தின் ஒளிபரப்பு தொடங்கவிருக்கிறது. அன்றுதான் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பதை அறிவிப்பார்கள்.

இப்போது அதுபற்றிய எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையில் பல்வேறு யூகச் செய்திகள் வெளியாகின்றன. அவற்றில் ஒன்று, இவ்வாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கலந்துகொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்படுவது.

தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகில் பலர் மீது பாலியல்புகார் சொல்லி அதிர வைத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

அண்மையில் விஷால் மீதும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இதனால் பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றால் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.

Related Posts