அனிருத் சிவகார்த்திகேயன் இணைந்து வெளியிட்ட படம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இரண்டாவது படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.
ஜூன் 14 அன்று இப்படம் வெளியானது. அன்று அதிகாலை ஐந்து மணிக் காட்சி படம் பார்த்துவிட்டு இலண்டன் புறப்பட்டுச். சென்றார்.
ஓய்வுக்கான பயணத்தோடு இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியையும் அவர் பார்க்கவிருக்கிறார் என்கிறார்கள்.
இன்று நடக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது. அந்தப் போட்டியை நேரில் காணவிருக்கிறார் சிவகார்த்திகேயன் என்று சொல்லப்பட்டது.
சிவகார்த்திகேயன் கிரிக்கெட் போட்டியைக் காண வருகிறார் என்ற தகவல் தெரிந்ததும் ஏற்கெனவே அங்கே இருந்த அனிருத், திரும்ப வராமல் அங்கேயே காத்திருந்தார் என்றும் சொல்லப்பட்டது.
அவற்றை மெய்ப்பிக்கும் விதமாக இங்கிலாந்தில் போட்டி நடக்கும் மைதானத்திலிருந்து அனிருத் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அவர்களுடைய ரசிகர்கள்,அந்தப்படத்தைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.











