September 25, 2026
Uncategorized

தேவி 2 – திரைப்பட விமர்சனம்

தேவி படத்தில் தமன்னாவுக்குப் பேய் பிடிக்கும் அதை அவருக்கே தெரியாமல் சரி செய்வார் பிரபுதேவா.

தேவி ப்ளஸ்டூ படத்தில் பிரபுதேவாவை ஒன்றுக்கு இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அவற்றை பிரபுதேவாவுக்குத் தெரியாமலே விரட்ட தமன்னா எடுக்கும் முயற்சிகள்தாம் படம்.

பிரபுதேவா அப்பாவித்தனமானவர் ஸ்டைலானவர் முரட்டுத்தனமானவர் ஆகிய மூன்று விதமாகத் தோன்றுகிறார். ஒன்றுகொன்று வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

சொக்குற பெண்ணே பாடலில் மிகவும் சிரமமான நடன அமைப்பை வைத்து அதில் அழகாக அவர் ஆடியது மட்டுமின்றி நந்திதா,டிம்பிள் ஹயாதி ஆகியோரையும் ஆடவைத்திருப்பது சிறப்பு.

தமன்னா முந்தைய பாகத்துக்குச் சற்றும் குறைவின்றி நடித்திருக்கிறார்.

கோவைசரளா சிரிக்க வைப்பது கொஞ்சம் சோதிப்பது அதிகம்.

சோனுசூத், அஜ்மல் உள்ளிட்டோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ஆர்.ஜே.பாலாஜி வருகிற காட்சிகள் சிரிப்பு வெடி.

சாம்.சி.எஸ் இசையில் சொக்குற பெண்ணே பாடல் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் நன்று.

அயனன்கா போஸ் ஒளிப்பதிவில் மொரிஷியஸ் தீவின் அழகை வாரிச் சுருட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

இரண்டு பேய்கள் இரண்டு கதைகள் என திரைக்கதை சுற்றுவது நம்மைத் தலை சுற்ற வைக்கிறது.

ஒரே மாதிரியான காட்சிகள் திரும்பத் திரும்ப வருவதும் பேயுடன் ஒப்பந்தம் என்பதும் சலிப்பூட்டுகின்றன.

முதல்பாகத்தில் தேர்ச்சி பெற்ற இயக்குநர் விஜய், ப்ளஸ் டூவில் கோட்டை விட்டிருக்கிறார்.

Related Posts