தொடரும் தர்பார் திருட்டு – இப்படியும் இருக்குமோ
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது அந்தத் தளங்களில் திருட்டுத்தனாக எடுத்த படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன.
இதனால், தற்போது மும்பையில் நடந்துவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் கைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின் தோற்றங்களை ரகசியமாகப் படம்பிடித்து இணையதளங்களில் உலவ விடுகிறார்கள்.
மும்பையில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பையும் பாதுகாப்பை மீறி திருட்டுத்தனமான படம் பிடித்து இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
ரஜினிகாந்தும் யோகிபாபுவும் நடித்த காட்சி, ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வரும் காட்சிகள் போன்றவற்றைப் படம் எடுத்து இணையதளங்களில் உலவ விட்டுள்ளனர்.
பெரிய நிறுவனம், பெரிய நடிகர் நடிக்கும் படப்பிடிப்புத் தளம் இவ்வளவு பாதுகாப்பற்றதாக இருக்கிறதா? எனப்பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க படக்குழுவினரே இவ்வாறு செய்தாலும் செய்யலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
இப்படியும் இருக்குமோ?











