சுதா கொங்கரா சூர்யா படத்தின் பெயர் வெளியானது
சூர்யா நடித்த என் ஜி கே படம் மே 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து காப்பான் படம் தயாராகிவிட்டது.
இப்போது, இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா38’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இப்படத்தின் பூசை ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.
இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்கா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
இப்படத்துக்கு இசை ஜீ.வி.பிரகாஷ். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பிற்கு சதீஷ் சூர்யாவும், உடைகளுக்கு பூர்ணிமா ராமசாமியும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்பார்வை மற்றும் படத்தின் பெயர் சற்றுமுன் (ஏப்ரல் 13 மாலை 4.30 மணி) வெளியானது.
படத்தின் பெயர் சூரரைப் போற்று. சூர்யா படத்தின் தலைப்புகள் வித்தியாசமாக இருக்கும் என்கிற கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாக இப்பெயரும் அமைந்துள்ளது.











