ராக்கி – திரைப்பட விமர்சனம்
அமிதாப்பாச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் உட்பட எல்லா முன்னணி இந்தி நடிகர்களையும் வைத்துப் படம் இயக்கியவர் கே.சி.பொக்காடியா.
1987 முதல் இன்று வரை படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் தயாராகி இன்று (ஏப்ரல் 12) வெளியாகியிருக்கும் படம் ராக்கி.
ஸ்ரீகாந்த் நாயகனாகவும் ஈசான்யா நாயகியாகவும் நடித்திருக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நாசர், ஷாயாஜி ஷிண்டே, ஓஏகே சுந்தர், கராத்தே ராஜா பிரம்மானந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இவ்வளவு நடிகர்கள் இருந்தாலும் கதையிலும் காட்சிகளிலும் முக்கியத்துவம் பெறுவது ராக்கி என்கிற நாய்தான்.
ஸ்ரீகாந்த் துடிப்பான காவல் அதிகாரி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். அவருக்கு சரியான ஜோடியாக ஈசான்யா இருக்கிறார். இருவருக்குமான காதல்; காட்சிகள் நன்று.
நாசர், ஷாயாஜி ஷிண்டே ஆகியோர் நடிப்பு பொருத்தம். கராத்தே ராஜாவுக்கு முக்கிய வேடம். நன்றாகச் செய்திருக்கிறார்.
பிரம்மானந்தம் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.
பப்பிலஹரியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ராக்கி தி ஹீரோ ரசிக்க வைக்கிறது.
ராக்கி என்கிற நாய் தேடித்தேடி வேட்டையாடும் காட்சிகள் சுவாரசியம். மனித உணர்வுகளை நாய்கள் வெளிப்படுத்துவது போன்ற காட்சிகள் அதிகம் இருக்கின்றன.
நாற்பது வருடங்களுக்கும் மேல் திரையுலக அனுபவம் கொண்ட இயக்குநர் கே.சி.பொக்காடியா, நடிகர்களை விட நாய்களை நம்பியிருக்கிறார். அவை ஏமாற்றவில்லை.
ஸ்ரீகாந்த் உயிரோடு இருக்கும்போதான காதல் பாடலை காஷ்மீர் பனி மலையிலும், அவர் இறந்தபின் வருகிற காதல் பாடலை ராஜஸ்தான் பாலைவனத்திலும் எடுத்திருப்பது இயக்குநரின் திறமைக்கு எடுத்துக்காட்டு.
இந்த ராக்கி குழந்தைகளைக் கவரும்.











