எம்ஜிஆர் கதாநாயகியின் கன்னத்தைத் தடவினார் என்பதில் என்ன தப்பு? – வெடிக்கும் கஸ்தூரி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னை கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடந்த போது,
என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs)
என்ரு ஒரு ட்வீட் செய்தார் நடிகை கஸ்தூரி.
அதற்கு, கிரிக்கெட் பௌலர் பந்தை தொடையில் தடவி பந்தை வீசுவதை கிண்டல் செய்யும் விதமாக மக்கள்திலகம் எம்ஜிஆரையும்,நடிகை லதாவையும் இணைத்து மிகவும் கேவலமாக விமர்சித்து தனது டிவிட்டரில் நடிகை கஸ்தூரி ஒரு கமெண்ட் போட்டுள்ளார்.இதனை கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று சிலர் கிளம்பிவிட்டார்கள்.
இதனால் இன்று,
MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும் பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.
புரட்சி தலைவர் ஒப்பற்ற தலைவர், தொண்டர்களின் இதயதெய்வம் என்பது எவ்வளவு உண்மையோ, நான் விரும்பும் நவரசகலைஞன் என்பதும் உண்மை. தெய்வத்தை இழிவுபடுத்தி விட்டேன் என்ற குற்றசாட்டை வன்மையாக மறுக்கிறேன்.
காமம் இழிவு, உடல் ரீதியான வெளிப்பாடுகள் தமிழ் கலாச்சாரத்திற்கு குறைவு என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். இந்து மத தெய்வங்கள் கூட காதல் லீலை புரிந்தவர்கள்தான்.
உடனே அமைதிப்படை அல்வா , தத்தோம் தகதிமி தோம் என்று தூக்கி கொண்டு வருபவர்களுக்கு – நான் மிகவும் அர்பணிப்புடன் நடித்த காட்சிகள் அவை. பொய்யாக அழுவது சுலபம். ஆக்ரோஷமாக நடிப்பது சுலபம். ஆனால் கவர்ச்சியை வெளிப்படுத்த மிகுந்த திறமையும் உழைப்பும் தேவை.
MGR அவர்களை தலைவராகவும் தெய்வமாகவும் மட்டும் பார்த்து நடிகராக அவர் வரலாற்றை மறைப்பது ரசிகனுக்கு அழகல்ல.
இருப்பினும் இதில் யார் மனமும் புண்பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்.
என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.









