நயன்தாராவுக்கு என்ன தகுதி இருக்கிறது? – கொதிக்கும் பெண்கள்
நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவைப் பற்றி தவறாகப் பேசிவிட்டார் என்கிற சர்ச்சை இப்போதுதான் ஓய்ந்தது.
அதற்குள் நயன்தாரா பற்றி அடுத்த சர்ச்சை தொடங்கிவிட்டது.
மார்ச் 28 அன்று வெளியான ஐரா படம் குறித்து உலவும் சர்ச்சை….
ஐரா படத்தில் மீடியா பெண்களைப் பற்றி ஒரு தவறான வசனம் வருகிறது. நீ முன்னேற… என நயனதாராவை, பொண்ணு பார்க்க வருகிறவர் கேவலமாகப் பேசுவார்.
ஆனால் இப்போது வரை
அந்த டயலாக் குறித்து மீடியாவில் உள்ள எந்த பெண் நிருபரும் தங்கள் கண்டனத்தை தெரிவிக்கவில்லை. இயக்குனர் சர்ஜூனிடம் ஒரு வார்த்தை கூட கேள்வி கேட்கவில்லை.
இப்படி எஸ் வி சேகர் பேசியபோது ஒட்டு மொத்த மீடியாவினரும் பொங்கி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
ஆனால் நயன் தாரா விஷயத்தில் மவுனம். சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா பற்றி ராதாரவி ஆபாசமாக பேசியபோது ஒட்டு மொத்த மீடியாவும் நயன்தாரா பக்கம் நின்றது.
அதே நயன் தாரா படத்தில் மீடியா பெண்கள் பற்றி இப்படி ஒரு மோசமான டயலாக் அதே காட்சியில் பெண்கள் உறுப்பு பற்றி நயன்தாரா ஒரு கெட்ட வார்த்தை யை மறைமுகமாக பேசுகிறார். இது
எந்த ஒரு மீடியாவை சேர்ந்த பெண்ணும் வாய் திறக்கவில்லை.
ஆண்களும் இந்த விஷயத்தில் மவுனம். எஸ்.வி சேகர், ராதாரவி பேசினால் பொங்குகிறவர்கள். நயன்தாரா விஷயத்தில் அமைதி.
படத்தைப் புகழ்ந்து படத்தை பாருங்கள் என்று பல பெண்களே சொல்கிறார்கள்.
சே….இப்படி போனால் அடுத்த படங்களில் நயன்தாராவும், இயக்குனர் சர்ஜூனும், தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேசும் மீடியாவை இன்னும் கேவலமாக சித்தரிப்பார்கள். கேவலமாகப் பேசுவார்கள்.
இவ்வாறு அந்தப் பதிவில் சொல்லப்பட்டுள்ளது.
நயன்தாரா ஏற்கெனவே விக்னேஷ்சிவன் இயக்கிய படத்தில் ஒங்கள … என்று தொடங்கும் ஆபாச வார்த்தை பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றை வைத்துக்கொண்டு ராதாரவியைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? என்கிற விமர்சனங்கள் வருகின்றன.











