தந்திடிவி பாண்டே செய்த செயல் – அஜீத் கோபம்
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை எச்.வினோத் இயக்கிவரும் இந்தப் படம், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் மொழிமாற்று.
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது.
இந்தப்படத்தில் முக்கிய வேடமொன்றில் தந்திடிவி புகழ் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். அவர், அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து யூ டியூப் சேனலொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,
எல்லோரும் சொல்வதுபோல அஜீத் அற்புதமான மனிதராக இருக்கிறார். மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பழகுகிறார்.
பழகக்கூடிய நண்பர்களுக்கு, உயிரைக் கொடுக்கக்கூடிய இடத்தில் இருக்கிறார். நிறைய ஆச்சரியங்கள் நிறைந்த மனிதராக இருக்கிறார். அதை நான் அனுபவித்தும் இருக்கிறேன். 15 நாட்கள், காலை முதல் மாலை வரை அன்றாடம் அவருடன் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அது மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ளார்.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பவர்கள் தன்னிச்சையாகப் பேட்டிகள் கொடுக்கக்கூடாது என்று உத்தரவே பிறப்பிக்கப்படும்.
இங்கும் ரங்கராஜ்பாண்டேவிடம் அப்படிச் சொல்லியும் அவர் தன்னுடைய விளம்பரத்துக்காக அஜீத் பெயரைப் பயன்படுத்தியதால் அஜீத் உள்ளிட்ட படக்குழுவினர் ரங்கராஜ்பாண்டே மீது கோபமாக இருக்கிறார்களாம்.











