விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – அதிகாரபூர்வ அறிவிப்பு
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய பட அறிவ்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் அனிருத்.
லைகா நிறுவனம் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தச் செய்தியை நமது cinemavalai.com இணையதளம் 2018 அக்டோபர் 21 ஆம் தேதி வெளியிட்ட செய்தி……
சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படமொன்றிலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி என்கிற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் மாறி மாறி நடந்துகொண்டிருக்கின்றன.
இவற்றைத் தொடர்ந்து இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து வெங்கட்மோகன் என்பவருடைய இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
இவர்கள் தவிர இப்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் சம்மதம் சொல்லியிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதாகவும் விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.
இவ்வாறு அப்போது எழுதியிருந்தோம். ஐந்து மாதங்களுக்குப் பிறகு இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
ஜூலை 2019 இல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.











